×

புதுச்சத்திரத்தில் 4 இடங்களில் விவசாய மின்மோட்டார்திருட்டு

சேந்தமங்கலம், ஜூன் 4: புதுச்சத்திரம் அருகே கல்யாணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிவேல். கடந்த இரு தினங்களுக்கு முன், இவரது விவசாய தோட்டத்தில் இருந்து ஆழ்குழாய் கிணற்று மின் மோட்டார் மாயமானது. இதேபோல், இவரது தோட்டத்திற்கு அருகே இருக்கும் சின்னுசாமி, பாலுசாமி, மற்றொரு பழனிவேல் ஆகியோரின் விவசாய தோட்டத்தில் இருந்த ஆழ்குழாய் மின் மோட்டார்களும் திருடு போனது. இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார், மின்மோட்டார்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : places ,
× RELATED கலாச்சார நிகழ்ச்சிகளில் காகித தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும்