கருணாநிதி பிறந்த நாள் விழா விஜய் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 4: கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் உள்ள வாசன் காம்ப்ளக்சில் இயங்கி வரும் விஜய் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த விழாவை நிறுவனர் துரைசாமி தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

பேராசிரியர் முகமது ஷெரிப் வரவேற்றார். விஜய் இன்ஸ்டிடியூட் கல்லூரி அறக்கட்டளையின் இயக்குநர் விஜய்பிரபாகரன் கலந்து கொண்டு கருணாநிதியின் உழைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறமை குறித்து பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு கருணாநிதியும் திராவிடமும், கருணாநிதியின் எழுத்தாற்றல், அண்ணா பெரியாருடன் அரசியல், திராவிட பங்கு என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிறுவனர் துரைசாமி ஸ்போக்கன் இங்கிலீஸ், அகராதி புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை அபிநயாசீனிவாசன், கவிதா, நித்யா மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். அன்புக்கரசி நன்றி கூறினார்.

Tags : Celebration ,Vijay Hotel Management College ,Karunanidhi ,
× RELATED தேமுதிக கொடிநாள் விழா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்