×

மாரியம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி, ஜூன் 4: கிருஷ்ணகிரி அருகே உள்ள பச்சிகானப்பள்ளி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழா மற்றும் காளியம்மன் மண்டலாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதில் பச்சிகானப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண் கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பச்சிகானப்பள்ளி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : Mariamman Temple Festival ,
× RELATED மாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக...