×

ஓசூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ சத்யா

ஓசூர், ஜூன் 4:ஓசூர் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக நகர செயலாளர் சத்யா, வெற்றி பெற்று எம்எல்ஏவானார். அவர் நேற்று, ஓசூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, திராவிடர் கழக மாவட்ட தலைவர் வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் துக்காராம், தி.க மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட அமைப்பாளர் முனுசாமி, மாவட்ட துணை தலைவர் ஜெயசந்திரன், நகர தலைவர் மணி, செயளாலர் பாலகிருட்டிணன், ஒன்றிய தலைவர் லட்சுமிகாந்தன், ஆடிட்டர் மயில்வாகனன் மற்றும் திமுக நிர்வாகிகள் சென்னீரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சத்யா ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 27 வாக்குகள் பெற்று, 23 ஆயிரத்து 213 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, வாக்காளர்களுக்கு சந்தித்து நன்றி தெரிவித்தார். ஓசூர் அருகே உள்ள பேரிகை மற்றும் அதன் சுற்றிலும் உள்ள கிராமங்களில், நேற்று திறந்த வேனில் சென்று நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நாகேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags : MLA Sathya ,Periyar ,idol ,Hosur ,
× RELATED பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் விதிகளை மீறி கட்டுமானமா?