கெலமங்கலம் அருகே மாரியம்மன் கோயில்

திருவிழாதேன்கனிக்கோட்டை, ஜூன் 4:  கெலமங்கலம் அருகே உள்ள போடிசிப்பள்ளி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவில் கணபதி பூஜை, கங்கா பூஜை, கோமாதா பூஜை, தீபாராதனை, அக்னிகுண்ட பிரவேசம் நடந்தது. திரளான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆடு, கோழி பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு தான,வீர,சூர கர்ணன் நாடகம் நடந்தது.

Tags : Mariamman Temple ,Kelamangalam ,
× RELATED இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.30.84 லட்சம்