×

அரூர் அரசு பெண்கள் பள்ளியில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை தொடக்கம்

அரூர், ஜூன் 4: அரூர் அரசு பெண்கள் பள்ளியில், ஆசியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவு நேற்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பயோமெட்ரிக் வருகை பதிவு தொடங்கப்படும் என பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு, பயோமெட்ரிக் பதிவு கருவி வழங்கப்பட்டு ஆசிரியர்களின் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த கல்வியாண்டின் முதல் நாளான நேற்று, அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு தொடங்கியது.

பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும், பள்ளிக்கு வருகை புரியும் போதும், பள்ளி நேரம் முடியும் போதும் அவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பயோ மெட்ரிக் வருகையை தலைமை ஆசிரியர் ராணி தொடங்கி வைத்தார். இதே போல், பள்ளி முதல் நாளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

Tags : Government ,Arur Government ,school ,
× RELATED வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி