×

கோடை விடுமுறை முடிந்து மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு உற்சாகமாக சென்ற மாணவ, மாணவியர்

விருதுநகர், ஜூன் 4: கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவியர் உற்சாகமாக சென்றனர்.
கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவது நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. சுமார் 50 நாட்கள் விடுமுறையில் வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள், வகுப்பறை சகதோழர்களை பார்க்க ஆர்வத்துடன் கிளம்பி சென்றனர். புதிய சீருடைகள் அணிந்து புத்தகச் சுமைகளை தூக்கி சென்ற மாணவர்கள், சக மாணவர்களை கண்டதும் கட்டித் தழுவியும், கை குலுக்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவிபெறும் 1,383 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 347 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,730 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2.70 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கான நோட்டுகள், புத்தகங்கள் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. ஆசிரியர்கள் வருகைப்பதிவு நேற்று முதல் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில், 99 சதவீத பள்ளிகளில் வருகை பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவேற்றம் ஆனது. சில பள்ளிகளில் இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னையால் ஆசிரியர்களின் வருகையை பதிவேற்றம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

Tags : student ,schools ,summer holiday ,district ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...