×

குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை ‘அவுட்’ கருணாநிதி பிறந்த நாள் விழா

சாத்தூர், ஜூன் 4: சாத்தூர் நகர, ஒன்றிய திமுக சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, முக்குராந்தலில், நகரச் செயலாளர் குருசாமி தலைமையில், கருணாநிதியின் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் கிழக்கு முருகேசன், மேற்கு சரவணக்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் அசோக், மாவட்டபிரதிநிதி முருகன், நகரஇளைஞரணி அமைப்பாளர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு: வத்திராயிருப்புவில் பேரூர் திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பேரூர் பொருளாளர் ஏசப்பன், முன்னாள் கவுன்சிலர்கள் மாரிமுத்து, கந்தசாமி, நகர விவசாய அணி அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் திமுக செயலாளர் பி.கே.குமார் பொதுமக்களுக்கு லட்டு மற்றும் ஆரஞ்சுப் பழம் வழங்கினர். திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karunanidhi ,birthday ceremony ,
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது