×

மார்க்கையன்கோட்டை சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகள் தீவிரம்

சின்னமனூர், ஜூன் 4: மார்க்கையன்கோட்டை சாலையில் வாகனங்களின் அழுத்தத்தால் குடிநீர் குழாய் உடைந்து குடிதண்ணீர் வெளியேறிதால் பொதுமக்களின் புகாருக்கு உடனடியாக அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.சின்னமனூர் அடுத்துள்ள அய்யம்பட்டி கிராம பஞ்சாயத்து கிராமம் உள்ளது. சுமார் 5 ஆயிரம் பேர் இங்கு வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் மார்க்கையன்கோட்டை முல்லைபெரியாற்றில் உறைகிணறு அமைத்து மார்க்கையன் கோட்டை சாலை பூமிக்கடியில் பிவிசி பைப் பதிக்கப்பட்டு குடிநீர் லைன்களாக கடக்கிறது. இச்சாலையில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சரக்கு வானங்கள், விவசாய வாகனங்கள் என அன்றாடம் கடக்கிறது. இதனால் பூமிக்கடியில் அழுத்தம் அதிகரிப்பதால் இந்த பிவிசி பைப் குழாய் லைன்களில் உடைப்பு ஏற்பட்டதால் நேற்று திடீரென குடிநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே குடிதண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  திடீரென தண்ணீர் வராததால், பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து தாமதமின்றி பணியாளர்கள் விரைவில் வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியினை தோண்டி உடைந்த பைப் லைனை துண்டித்து புதிய குழாயினை பதித்து மீண்டும் குடிநீர் சப்ளை கொடுத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : drinking water tube breakage ,road ,Marakayankottai ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி