×

விசிக கலெக்டரிடம் மனு தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 254 மனுக்கள்

தேனி, ஜூன் 4: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 254 மனுக்கள் குவிந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடப்பது வழக்கம். கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து கோரிக்கை மனுக்களை அளிப்பர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்களிடமிருந்து 254 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரும்பாலான மனுக்கள் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கல்விக்கடன் கோருதல், இலவச தையல் எந்திரம் கோருதல் உள்ளிட்ட மனுக்களை அளித்தனர்.

இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைத்த கலெக்டர், இம்மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Meenu Thani Collector ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை