×

பட்டா வழங்கக்கோரி தாசில்தார் ஆபீஸில் மக்கள் தஞ்சம் சமையல் செய்து போராடியதால் பரபரப்பு

காரைக்குடி, ஜூன் 4:  பட்டா கேட்டு காரைக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்து சமையல் செய்து மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடியில் இருந்து ஓ.சிறுவயல் செல்லும் சாலையில் உள்ளது ராஜீவ்காந்தி நகர். இங்குள்ள கண்டனூர் ஊரணி பகுதியில் வசித்த 30 குடும்பங்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு  இடம் வழங்கப்பட்டு அவர்கள் வீடுகட்டி குடியிருக்கின்றனர். உரிய வீட்டு வரி, பட்டா இல்லாததால்  மின்இணைப்பு இல்லை.

இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை இதனை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சாத்தையா, ஒன்றிய குழு உறுப்பினர் முத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்து சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் பாலாஜி உறுதியளித்தார். இதன் பேரில் கலைந்து சென்றனர்.  

சாத்தையா (விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர்) கூறுகையில், ‘‘ 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்தும் பட்டா வழங்காமல் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் புறக்கணித்ததால் நீதிமன்றம் சென்றனர். விசாரணை செய்து பட்டா தரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தாசில்தார் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளார்’’ என்றார்.

முத்து (விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியகுழு உறுப்பினர்) கூறுகையில், ‘‘உயர் நீதிமன்றம் தெரிவித்தும் இதுவரை பட்டா வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். பட்டா வழங்காமல் அதிகாரிகள் மக்களை அலைக்கழித்து வருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் வருவாய் அலுவலகத்தில் தஞ்சம் புகும் போராட்டம் தொடர் போராட்டமாக நடத்தப்படும்’’ என்றார். உயர் நீதிமன்றம் தெரிவித்தும் இதுவரை பட்டா வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால் வருவாய் அலுவலகத்தில் தஞ்சம் புகும் போராட்டம் தொடர் போராட்டமாக நடத்தப்படும்.

Tags : Tashildar ,
× RELATED சிதம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் டியூப் லைட் வெடித்து சிதறியது