சிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

சிவகங்கை, ஜூன் 4:  சிவகங்கை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அருகே இருப்பான்பூச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜகோபால். இவர் இதே பகுதியை சேர்ந்த தெருவில் விளையாடிக்கொண்டிருந்த தனது உறவினரான ஐந்து வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது வீட்டில் கூறினார். இதையடுத்து சிறுமியின் தந்தை சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags : Sexual harassment ,Sivagangai ,
× RELATED துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை