×

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மாவட்டம் முழுவதும் 11,466 பேர் விண்ணப்பம்

ராமநாதபுரம், ஜூன் 4: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 11,466 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு வருகின்ற 8 மற்றும் 9ம் தேதிகளில் நடக்க உள்ளது. 8ம் தேதி இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல்தாள் தேர்வும், 9ம் தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் முதல் தாள் தேர்வு ராமநாதபுரத்தில் 7, பரமக்குடியில் 2 என 9 மையங்களில் நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுத 3,369 பேர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டாம் தாள் தேர்விற்கு மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் பட்டிணம்காத்தானில் 14 மையங்களுகம் பரமக்குடியில் 8 மையங்களிலும் நடைபெற உள்ளது. இதில் 8,097 பேர் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு மையங்களில் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதிகளும், தேர்வு நேரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் மையத்திற்கும் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் இருப்பார்கள். தேர்விற்கு வருபவர்கள் ஹால்டிக்கெட், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள நீலம், கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே கொண்டுவர வேண்டும்.

செல்போன், கம்ப்யூட்டர் கால்குலேட்டர் மற்றும் கைக்குட்டை ஆகியவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததோடு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். பதிவிறக்கம்
செய்த ஹால்டிக்கெட்டில் புகைபடம் இல்லாதவர்கள் அதில் புகைப்படத்தை ஒட்டியும் கூடுதலாக ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் ஒன்று தேர்வு எழுதும் நாளில் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Teacher Eligibility Test ,
× RELATED ஆசிரியர் தகுதித் தேர்வில் 1.50 லட்சம் பேர் பங்கேற்கவில்லை