×

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பலியான பெண்ணுக்கு முதல்வர் நிவாரண நிதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

மதுரை, ஜூன் 4: ஷேர் ஆட்ேடா கவிழ்ந்ததில் பலியான பெண்ணின் மகளுக்கு முதல்வரின் நிவாரண நிதி வழங்கப்பட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த ரம்ஜான் ரோஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் தாய் ஜமீலா, காய்கறிகள் வாங்கி விற்று பிழைப்பு நடத்தினார். கடந்த 9.7.2015ல் ஷேர் ஆட்டோவில் சென்றார். யானைக்கல் பகுதியில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது பலத்த காயமடைந்தார். உடனடியாக மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம்.

சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். எனது தாயின் தயவில் தான் நான் வாழ்க்கை நடத்தினேன். அவர் இறந்ததால் போதிய வருவாயின்றி எனது குடும்பத்துடன் மிகவும் சிரமப்படுகிறேன். எனது தாய் சாலை விபத்தில் இறந்ததால், தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் எனக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழக முதல்வரின் நிவாரணத்தில் இருந்து நிதியுதவி வழங்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எனது மனுவை 12 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், எனக்கு முதல்வரின் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்தார். 

Tags : Shear Auto ,victim ,court ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...