×

பண்ணைக்குட்டை அமைக்க கமிஷன் விவசாயிகள் புகார்

திருமங்கலம், ஜூன் 4: திருமங்கலம் பகுதியில் மானியத்தில் அமைக்கும் பண்ணைக்குட்டைகளுக்கு ஒருசில வேளாண் அதிகாரிகள் கமிஷன் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு தொடர்விவசாயம் நடைபெற முக்கிய திட்டமாக பண்ணைக்குட்டைகள் திகழ்கிறது. 2 லட்ச ரூபாய் செலவில் விருப்பப்படும் ஒவ்வொரு விவசாயும் பண்ணைக்குட்டைகளை அமைத்து கொள்ளலாம். இதில் ஒரு லட்ச ரூபாய் மானியமாக தரப்படுகிறது. மீதமுள்ள ஒரு லட்சத்தை பயனாளி விவசாயி செலவிடவேண்டும்.

திருமங்கலம் சுற்றுவட்டாரத்தில் எட்டுநாழி, புதூார், கீழக்கோட்டை, சவுடார்பட்டி, மைக்குடி, மேலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனர். 90 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் இந்த குட்டைகள் அமைக்கப்படுவதால் மழைக்காலங்களில் பொழியும் மழைநீர் இங்கு சேகரிக்கப்படுகிறது.

அதன்பின்பு விவசாயிகள் தேங்கிய நீரினை கொண்டு இரண்டு, மூன்று காலங்களுக்கு பயன்படுத்தி விவசாயத்தை தொடரமுடியும். இதனால் விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் அமைக்க ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன. ஆனால் இவர்களுக்கு அதிர்ச்சியாக வேளாண்மை துறையினர் ஒருசிலர் பண்ணைக்குட்டை அமைக்க 5 ஆயிரம் முதல் 10 ரூபாய் ஆயிரம் வரையில் பணம் கமிஷனாக கேட்பது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
 
பணம் கொடுத்தால் தான் விவசாயிகளின் பெயர்களை வங்கி கணக்கில் உடனுக்குடன் ஏற்றமுடியும் என அவர்கள் கூறி பணம் வாங்கி செல்கின்றனர். அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்களில் ஒருசிலர் தங்களது சுயலாபத்திற்காக பணம் கேட்பது எந்தவிதத்தில் நியாயம் என விவசாயிகள் புலம்புகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : farm ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி