×

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை 250 ஆக உயர்த்த அனுமதி

மதுரை, ஜூன் 4: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையை 250 ஆக உயர்த்திக்ெகாள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி ெகாடுத்துவிட்டதால், நடப்பாண்டில் இக்கல்லூரியில் 250 மாணவர்களுக்கான சேர்க்கை நடக்க உள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கை 150 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக சுகாதாரத்துறையும், மதுரை மருத்துவக் கல்லூரியும் போராடி வந்தது. இந்திய மருத்துவக் கவுன்சில் இந்த அனுமதியை வழங்க இழுத்தடித்து வந்தது. ஒவ்வொரு முறையும் ஆய்வுக்காக வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஏதாவது ஒரு குறைபாட்டை கூறி காலம் தாழ்த்தி வந்தனர். அதிகாரிகள் கூறும் குறைபாடுகளை மருத்துவக்கல்லூரி நிர்வாகமும் சளைக்காமல் செய்துவந்தது.

இந்நிலையில் மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை 100 அதிகரித்து, இக்கல்வி ஆண்டிலேயே 250 மாணவர்களை எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி கடிதம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதாவுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இக்கல்லூரியில் இந்தாண்டு இன்னும் சில தினங்களில் அட்மிஷன் துவங்க உள்ள நிலையில் 250 மாணவர்கள் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் சேர உள்ளனர். இந்திய மருத்துவக்கவுன்சிலின் இந்த அனுமதியால், டீன், மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : MBBS ,Madurai Government Medical College ,
× RELATED நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப்...