×

கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல், ஜூன் 4: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் 14வது வார்டு பகுதியில் கட்சி கொடியை மாவட்ட பிரதிநிதி சரவணன் ஏற்றி இனிப்புகள் வழங்கினார். திண்டுக்கல்லில் பள்ளி குழந்தைகளுக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் இனிப்புகள் வழங்கினார்.

பாலசமுத்திரத்தில் ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் ஒன்றிய செயலாளர் சௌந்திரபாண்டியன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் காளிமுத்து, இளைஞரணி நிர்வாகி ரஞ்சித்குமார், பேரூர் செயலாளர் சுப்புராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் நகர திமுக சார்பில் மூஞ்சிக்கல்லில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி கொடியேற்றி நகர செயலாளர் முகமது இப்ராகிம் இனிப்புகள் வழங்கினார். இதில் நகர துணை செயலாளர் சக்திமோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் செல்லத்துரை, ஏபிஎன் பிச்சை, ஆண்டவர் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு நகர திமுக சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதத செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், வார்டு செயலாளர்கள் நாட்ராயன், காதர்முகைதீன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், முருகேஸ் உள்பட கலந்து கொண்டனர்.
 
வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்து கருணாநிதி படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ஊராட்சி செயலாளர் பொன்னம்பலம் அனைவரையும் வரவேற்று இனிப்புகள் வழங்கினார். இதில் நிர்வாகிகள் வளர்மதி, தர்மலிங்கம், பொன்னையா, ஆறுமுகம், சிவநாதன், திருஞானம், பாலுச்சாமி, துரையரசன், சங்கர், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குஜிலியம்பாறை ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை வகிக்க, பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். கருணாநிதி படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி கட்சி கொடியேற்றினர். தொடர்ந்து 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இதேபோல் சத்திரப்பட்டி, லந்தக்கோட்டை, பாளையம், குஜிலியம்பாறை, கோட்டாநத்தம், உல்லியக்கோட்டை, வான்ராயன்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் மாரிமுத்து, அண்ணாத்துரை, தாமரைக்கண்ணன், பொன்சுப்பிரமணி, செல்வநாராயணன், சௌந்தர்மாரியப்பன், ரவி, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Celebration ,Karunanidhi Birthday Celebration ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்