ரம்ஜான் நலத்திட்ட உதவி வழங்கல்

திண்டுக்கல், ஜூன் 4: ரம்ஜான் பண்டிகையையொட்டி திண்டுக்கல் பேகம்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேஷ்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொகுதி தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை வகிக்க, செயலாளர் முகம்மது நசீர் வரவேற்றார். மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் முகம்மது மதர்ஷா முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் யூசுப் அன்சாரி, சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், ப்ரண்ட் ஆப் இந்திய நகர தலைவர் இர்பான் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு இலவச வேஷ்டிகளை வழங்கினர். கிளை தலைவர் முகமது ரபீக் நன்றி கூறினார்.

× RELATED தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்