லாரி மோதி இன்ஜினியர் பலி

புதுச்சேரி, ஜூன் 4: புதுச்சேரி காந்தி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேலு (65). பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் வழுதாவூர் சாலையில் உள்ள
ஒரு கடைக்கு வந்துவிட்டு, தனது டூவீலரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று டூவீலர் மீது வேகமாக மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த வேலு பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வேலு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Larry ,
× RELATED ஜம்மு-காஷ்மீரின் கத்துவாவில்...