×

விழுப்புரம் மாவட்டத்தில் 13 தாலுகாவில் வருவாய் தீர்வாயம் துவக்கம்

விழுப்புரம், ஜூன்  4: விழுப்புரம் மாவட்டத்தில் 13 தாலுகாவிலும் நேற்று ஜமாபந்தி துவங்கியது. மனுகொடுப்பதற்காக பொதுமக்கள் குவிந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாவிலும் நேற்று தொடங்கிய ஜமாபந்தி வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. சின்னசேலத்திற்கு ஆட்சியர் சுப்ரமணியனும், மரக்காணம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விக்கிரவாண்டிக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் வானூருக்கு விழுப்புரம் சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர், திண்டிவனத்திற்கு அங்குள்ள சப்-கலெக்டர், மேல்மலையனூருக்கு நில எடுப்பு தனித்துணை ஆட்சியர், திருக்கோவிலூர் தாட்கோ மாவட்ட மேலாளர், உளுந்தூர்பேட்டைக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர், கண்டாச்சிபுரம் திருக்கோவிலூர் சப்-கலெக்டர், கள்ளக்குறிச்சிக்கு அங்குள்ள சப்-கலெக்டர், சங்கராபுரத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று துவங்கிய ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், வங்கி கடனுதவி, அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் ரகுபதி தலைமையில் ஜமாபந்தி நடந்தது. முதல்நாளில் கண்டமங்கலம் குறுவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். 240 மனுக்கள் குவிந்தன. இன்று தொடர்ந்து கண்டமங்கலம் குறுவட்டமும், 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை வளவனூர் குறுவட்டமும், 11ம் தேதி முதல் 12ம் தேதி வரை காணை குறுவட்டமும், 13, 14ம் தேதி விழுப்புரம் குறுவட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் நடக்கிறது.
திண்டிவனம்: திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் மெர்சி ரம்யா  தலைமையில் நேற்று வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் மயிலம்  குறுவட்டத்திற்கு உட்பட்ட 10 கிராம மக்களிடம் 113 மனுக்கள் பெறப்பட்டது. 2  மனுக்கள் ஏற்கப்பட்டது . 101 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.  பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர்  தெரிவித்தார்.

மேலும் மற்ற குறு வட்டங்களின் மனுக்களை நாள்தோறும் காலை  10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெறப்படும். கூட்டத்தில் வட்டாட்சியர்  ரகோத்தமன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் (தனி) ரங்கநாதன், சார் ஆட்சியர்  நேர்முக உதவியாளர் செந்தில்குமரன், நத்தம் நிலவரி தனி வட்டாட்சியர் நளினி,  தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அனந்தசயனன், மண்டல துணை வட்டாட்சியர்கள்  வேலு, கிருஷ்ணதாஸ், நில அளவை பிரிவு துரைராஜ், வருவாய் ஆய்வாளர்கள் செல்வகுமார், அக்தர்ஜகான் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : taluks ,Villupuram district ,
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...