×

கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகம் உளுந்தூர்பேட்டையில் செயல்படும்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 4: தமிழகத்தில் பெரிய மாவட்டமாக உள்ள விழுப்புரம் மாவட்டம் கடந்த ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமை இடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உறுவாக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தார். புதிதாக துவங்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தந்த பகுதிகளை இணைப்பது, புதிய அதிகாரிகள் அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதுவரையில் அறிவிக்கப்பட்டாமல் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சி பிரேக்கிங் நியூஸ் என்ற தலைப்பில் ஒரு வீடியோ காட்சி வெளியாகி வருகிறது.

அந்த வீடியோவில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்களும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் அமைய உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டதாகவும் அந்த வீடியோ காட்சிகள் வெளியானது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இந்த வீடியோ காட்சிகள் தொடர்ந்து சமூக வளைதளங்களில் வந்துகொண்டே இருப்பதால் கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் தகவல் உண்மையானதா என்று குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து நிலவி வரும் குழப்பதை தவிர்க்க உரிய அறிக்கையினை வெளியிட வேண்டும் என்றும், இது போன்ற தனியார் தொலைக்காட்சியின் பெயரில் வீடியோ வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திய நபர்கள் மீது காவல்துறை மாவட்ட எஸ்பி கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kallakurichi ,district office ,Ulundurpet ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...