×

விண்ணப்பித்த அனைவருக்கும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை

தூத்துக்குடி,ஜூன் 4:  ஆன்லைனில் விண்ணப்பித்த அனைவருக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் கலெக்டர் சந்தீப் நத்தூரியிடம் அளித்த மனு: வரும் 2018-19ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டிற்காக இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பிரிமீயம் செலுத்தியுள்ளோம். இதன் மூலம் பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்கும் என்று நம்பியிருந்த நிலையில், சிலருக்கு ஆவணங்கள் சரியில்லை என்று கூறி விண்ணப்பத்தை மீண்டும் ஸ்கேன் செய்து அனுப்புமாறு செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகள் பலர் தங்களது உறவினர்களின் செல்போன் எண்ணை கொடுத்துள்ளனர். இதனால் சம்பந்தபட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தகவல் சென்று சேரவில்லை. எனவே ஆவணங்கள் திருப்பி ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய விவசாயிகளின் பட்டியலை தாசில்தார் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மூலம் முறைப்படி அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தி, விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டுத் தொகை கிடைத்திட  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : applicants ,
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,249 பேர் எழுதினர்