கோவில்பட்டி ஆரா செல்டர்ஸ் அதிபர் இல்லத்திருமண விழா

கோவில்பட்டி, ஜூன் 4:  கோவில்பட்டி ஆரா செல்டர்ஸ் அதிபர் ஜேசுமணி-வசுமதி தம்பதியரின் மகன் வர்ஷன், தூத்துக்குடி டி.சவேரியார்புரம் ராஜ் சேர் மார்ட் அதிபர் தொம்மைராஜ்-தீபா தம்பதியரின் மகள் டாக்டர் அர்ச்சனா ஆகியோருக்கு தூத்துக்குடி டி.சவேரியாபுரத்தில் உள்ள தூய சவேரியார் ஆலயத்தில் திருமணம் நடந்தது. திருமண விழாவிற்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் ஆலய பங்குத்தந்தை ஜேசுநசரேன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில் கோவில்பட்டி மகாலட்சுமி குரூப்ஸ் சேர்மன் சந்திரசேகர்-பாண்டியம்மாள் ஆகியோர் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் எஸ்.பி.முரளிராம்பா, கோவில்பட்டி தொழில்வர்த்தக சங்க தலைவர் பழனிச்செல்வம், ரீஜெண்ட் அரிபாலகன், கூடலிங்கம்  சுதாகர், ஜோதிலிங்கம் செந்தில்குமார், ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், வக்கீல் சம்பத்குமார், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், தொழிலதிபர்கள் கோவிந்தராஜ், காமராஜ், வேலுச்சாமி, முத்துகிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர். ஏற்பாடுகளை தொழிலதிபர்கள் ஜேசுமணி-வசுமதி மற்றும் தொம்மைராஜ்-தீபா குடும்பத்தினர் செய்திருந்தனர். மணமகன் வர்ஷன் நன்றி கூறினார்.

Related Stories: