×

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

தூத்துக்குடி, ஜூன் 4: கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா அல்லது இலவசமாக அரசு சார்பில் வீடு கட்டிகொடுக்க வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் புதூர், புதுக்காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில்:
 எங்கள் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதி,  எங்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை வருவதாக அறிகிறோம்.  இப்பகுதியில் அங்கன்வாடி, பெட்ரோல் பல்க், கோவில்கள் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன.  இவற்றை தாண்டித்தான் டாஸ்மாக் கடைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.

மேலும் இப்பகுதியில் மாலையிலும் காலையிலும் பெண்கள், முதியவர்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். விவசாய பணிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் என பலரும் இந்த பகுதியை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இங்கு டாஸ்மாக் அமைந்தால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிடும். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் நிலை உருவாகும் எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஆணையை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு