×

96வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் கலைஞர் படத்துக்கு திமுகவினர் மரியாதை

தென்காசி, ஜூன் 4:  மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96வது பிறந்த நாள் விழா, தென்காசி நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகளும், ஆய்க்குடி அமர்சேவா சங்க மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சொக்கலிங்கம், நடராஜன், அப்துல்கனி, புலியூர் பாலா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராஜா, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஷேக்பரீத் வரவேற்றார். நகர நிர்வாகிகள் மோகன்ராஜ், காஜா, இஸ்மத், தேவதாஸ், சந்திரன், முருகானந்தம், பரமசிவன், ஆறுமுகம், மணிராஜ், ராமையா, அஸரப்அலி, சூசைசுந்தரம், பட்டாணி, அப்துல்மஜீத், சண்முகநாதன், இசக்கிமுத்து, சித்தார்த்தன்  உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலகரத்தில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி சம்முகுட்டி, ஒன்றிய பிரதிநிதிகள் யாகவாசுந்தர், செல்வராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ், கபிலன் முன்னிலை வகித்தனர், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கிட்டுபாண்டியன் வரவேற்றார். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் திவான்ஒலி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
தொண்டரணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கபாண்டியன், ராம்துரை, காசி, கனி, சுந்தர், பாலசுப்பிரமணியன், முருகன், குமாரசாமி, தங்கையா, முருகன், மனோகரன், சாமி, பன்னீர், சீனிவாசன், ராஜ், வல்லம் செல்வம் ஐயப்பன் பங்கேற்றனர். கனேசன் நன்றி கூறினார்.

 தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொமுச சார்பில், புதிய தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வல்லம் திவான்ஒலி தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர் வெள்ளப்பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் மணிராஜ், சுப்பிரமணியன் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். மணிகண்டன், தர்மலிங்கம், சம்முகுட்டி, முத்துராஜ், செல்லப்பா, இக்னேசியஸ், கருப்பையா, சாஸ்தா, மகேஷ்குமார், நடராஜன், முருகேசன், ராஜகோபால், சரவணன், பாலாஜி பங்கேற்றனர்.

அம்பை பூக்கடை சந்திப்பில், நகர செயலாளர் பிரபாகரன் கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்பை அரசு மருத்துவமனையில், பிறந்த 5 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி அண்ணாத்துரை, இலக்கிய அணி ராமசாமி, மகளிரணி வசந்த ஆரோக்கியமேரி, லட்சுமி அம்மாள், விவசாய அணி ராமையா, சதன் துரை, வழக்கறிஞர்கள் ரமேஷ், சாமிநாதன், சண்முகநாதன், சண்முகசுந்தரம், சரவணநாதன், காஜாமுகைதீன், கோதர் இஸ்மாயில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாபநாசத்தில் அரசு போக்குவரத்து கழக தொமுச சார்பில் கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பணிமனை தொமுச செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். தலைவர் செல்வராஜ், பொருளாளர் சோமு, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொமுச உறுப்பினர்கள் முத்துமாலை, இசக்கிமுத்து, ராஜாராம், செரீப், ராஜன், சுரேஷ், முத்தையா, செல்லப்பா, தங்கமகாராஜா, லெட்சுமணன், கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பணகுடியில் கலைஞர் பிறந்த நாளையொட்டி பஸ் நிலையத்தில் திமுக கொடியேற்றி கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி சேவியர் செல்வராஜா, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். திமுக நகர செயலாளர் தமிழ்வாணன், வழக்கறிஞர் பிரவு சகாய புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடப்பட்டது. வட்டார மருத்துவர் கோலப்பன் மற்றும் மருத்துவர்கள், நகர துணை செயலாளர் ஜெயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மாணிக்கம், அசோக்குமார், ஒன்றிய பிரதிநிதி வெற்றிவேல், காவல்கிணறு ஊராட்சி திமுக செயலாளர் இளங்கோவன், தகவல்தொழிநுட்ப பிரிவு விஜயகுமார், மாதவன், பிரதிநிதிகள் ஜமால், அலிம், மகளிர் அணி மல்லிகா, வர்த்தகர் அணி ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வி.கே.புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். அம்பை ஒன்றிய செயலாளர் பரணிசேகர், மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினர் ராஜம்ஜான், அவைதலைவர் அதியமான், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பகுத்தறிவு பேரவை செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். இதில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் பீட்டர்சுவாமிநாதன், விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் குட்டிகணேசன், தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வைகுண்டன், முன்னாள் கவுன்சிலர்        இசக்கிபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கீழக்கலங்கல், மருக்கலாங்குளம், ஊத்துமலை, பலபத்ரராமபுரம், வாடியூர் மற்றும் பல்வேறு கிராமங்களில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு வீராணம் ஷேக்முகமது, ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன், மகாராஜன், முருகேசன், லட்சுமணன், முருகன், சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல் சாம்பவர்வடகரை பகுதியில் இளைஞர் அணி செயலாளர் முத்து தலைமையில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேரூர் செயலாளர் மாறன் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

விழாவில் சுடலைமுத்து, சங்கரராமன், இளைஞர் அணி பக்ருதீன், ராஜேந்திரன், செய்யது அபு, அருமைநாயகம், சித்திரைக்கனி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுந்தரபாண்டியபுரம் திமுக பேரூர் செயலாளர் மாரியப்பன் தலைமையில் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலைஞர் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பழம், பிஸ்கட் வழங்கப்பட்டது. சித்த மருத்துவர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு நகர செயலாளர் ரஹீம் தலைமை வகித்தார். கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான், மாவட்ட துணை செயலாளர் பேபி ரஜப் பாத்திமா, பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், நகர துணை செயலாளர்கள் பீர்முகம்மது. குட்டிராஜா, பொருளாளர் ஜெயராஜ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் மேரிஅந்தோணிராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகர இளைஞரணி இசக்கி துரைபாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாகுல் ஹமீது, வழக்கறிஞர் அணி லூக் ஜெயக்குமார், மாரிகுட்டி, செல்லதுரை, பேச்சாளர் குத்தாலிங்கம், டெய்லர் சரவணன், ஜோதிமணி, இசக்கிமுத்து, கோபால், பால் அய்யப்பன், கலைஞர் தமிழ் சங்க நிர்வாகிகள் ஜோதிமணி, பெர்னாட்ஷா மணிகண்டன், தொழிற்சங்க நிர்வாகிகள் தம்பு, மணி, திருமலைக்குமார், குமாரசாமி, இசக்கிமுத்து, பாலமுருகன், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி நகர திமுக சார்பில் அம்பேத்கர் நகர் கலைஞர் படிப்பகம் முன்பு திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. விஸ்வநாதப்பேரி ரேணுகாம்பாள் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாசுதேவநல்லூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், மதிய உணவு வழங்கப்பட்டது. வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் முன்பு பேரூர் திமுக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து நடந்தது.

நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், நகர செயலாளர்கள் டாக்டர் செண்பகவிநாயகம் (சிவகிரி), கேடிசி குருசாமி (ராயகிரி), சரவணன் (வாசுதேவநல்லூர்), வழக்கறிஞரணி மாவட்ட அமைப்பாளர் மருதப்பன், துணை அமைப்பாளர் பொன்ராஜ், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் மெடிக்கல் சுந்தர், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மனோகரன், பூமிநாதன், திமுக ஒன்றிய துணை செயலாளர் மாரித்துரை, நல்லசிவன், சீமோன் செல்லத்துரை, ராயகிரி இளைஞரணி அமைப்பாளர் விவேகானந்தன், மாவட்ட பிரதிநிதி மைதீன் கனி, டாக்டர் சுமதி, வாசு. தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கிப்சன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகன், புளியங்குடி நகர ஒருங்கிணைப்பாளர் ஞானதிரவியம், புளியங்குடி ராஜகாந்த், ராஜவேல் பாண்டியன், ராஜேந்திரன், வாசுதேவநல்லூர் நிர்வாகிகள் சொர்ணராஜ், முனீஸ்வரன், சுருளிவேல், காளியப்பன், செந்தூர்பாண்டியன், குத்தாலிங்கம், திருப்பதி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூரில் நகர திமுக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. நகர செயலாளர் சேகனா தலைமை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நகர நிர்வாகிகள் அப்துல் வகாப், சங்கரன், பால்துரை, சங்கர், மஸ்தான், மாரியப்பன், ராமர் பாண்டி, நடராஜன், முருகன், ஹரிதாஸ், மயில்சாமி, செல்லப்பா, சீனிவாசன், பெருமாள்துரை, சுப்பையா, குருசாமி, வீரபுத்திரன், ஆதினம், முருகையா, காளிமுத்து, வானுவர் அலி, ஜமீன் ஷாகிபு , அப்துல் காதர், சேகனா, மணிகண்டன், பிரமநாயகம், தம்புராஜ், ஜபருல்லா, சித்திக், முப்புடாதி, மாரி, செய்யது, கணேசன், முருகையா, செல்வம், ைமதீன், ெசல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : celebration celebration ,artist ,DMK ,
× RELATED 2023 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு