கடையம் சந்தையில் பரபரப்பு கன்டெய்னரில் கொண்டு வரப்பட்ட மாடுகள் மீட்பு

கடையம், ஜூன் 4:  கடையம் சந்தைக்கு கன்டெய்னரில் அடைத்து கொண்டு வரப்பட்ட மாடுகளை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் கால்நடை சந்தைகளில், கடையம் மாட்டுசந்தை பிரபலமானது. வாரத்தில் திங்கட்கிழமை தோறும் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பெரும்பாலும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நேற்று சந்தை நடந்த நிலையில், விதிமுறைகளை மீறி மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கடையம் எஸ்ஐ ஈஸ்வரபிள்ளை தலைமையில் போலீசார், எஸ்பி ஏட்டு ரவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது மதுரையில் இருந்து கன்டடெய்னர் லாரியில் மாடுகளை அடைத்து கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

Tags :
× RELATED நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி இடையே...