×

ஆதிபராசக்தி கோயிலில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

நாகர்கோவில், ஜூன் 4 : நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் யாதவர் தெருவில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட கோயிலில் ஆண்டுதோறும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அடிகளாரின் 79வது அவதார திருநாளை முன்னிட்டு  790 ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகமும், பேனாவும் வழங்கப்பட்டது. 18 மாணவ, மாணவிக்கு ஸ்கூல் பேக்கும் வழங்கப்பட்டது.
இந்த ஸ்கூல் பேக்குகளை நியூ ஜனதா புட்வேர் ஷோரூம் வழங்கியது. மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை நாகர்கோவில் ஏஎஸ்பி ஜவஹர் வழங்கினார். விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு தமிழில் விசேஷ பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து 1008 போற்றி திருவுரு, 108 போற்றி திருவுரு, நாட்டில் மனித நேயம் வளரவும், மண்வளம், மழைவளம் பெருகவும் கூட்டு தியானம் நடந்தது. இதை சக்தி பீடத்தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்து நடத்தினார். விழா ஏற்பாடுகளை சக்தி பீடத்தலைவர் சின்னத்தம்பி தலைமையில் துணைத்தலைவர் அருணாசலம், பொருளாளர் அசோக்குமார், செயலாளர் சந்திரன், மகளிரணித் தலைவி செல்வரத்தினம், நாகராஜன், ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், செந்தில், பால்ராஜ் மற்றும் கிருஷ்ணன் கோவில் சக்தி பீடத்தினர் செய்திருந்தனர்.

Tags : Adiraparakthi Temple ,
× RELATED கொல்லஞ்சி ஊராட்சி தலைவி குறித்து அவதூறு எஸ்பியிடம் மனு