இந்த மாதம் முதல் பிஎஸ்என்எல் காகித பில்கள் நிறுத்தம் பொதுமேலாளர் தகவல்

நாகர்கோவில், ஜூன் 4:  நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பசுமை மயமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதாந்திர தொலைபேசி பில்களை வாடிக்கையாளர்களுக்கு நடப்பு மாதம் முதல் மின்னஞ்சல், எஸ்எம்எஸ் போன்ற மின்னணு முறை மூலம் அனுப்ப ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியை அருகே உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது உள்ளூர் தொலைபேசி நிலைய பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் உடனே வழங்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பிஎஸ்என்எல் பசுமை மயமாக்குதல் முயற்சி திட்டத்தில் பங்கேற்று மரங்களை காப்பாற்றிட வேண்டும்.

மேலும் பிஎஸ்என்எல் லேண்ட் லைன், பிராட்பேண்ட், மொபைல் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் தங்களது மாதாந்திர பில்களை வாடிக்கையாளர் தம் வீடுகளுக்கு அருகே உள்ள பிஎஸ்என்எல்-ன் அங்கீகரிக்கப்பட்ட ரீடைலர்கள் மூலமாக உடனடியாக செலுத்திட புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ரீடைலரிடம் செலுத்தும் பில் தொகைக்கான ரசீது வாடிக்கையாளரின் மொபைல் போனில் உடனடியாக தெரிவிக்கப்படும்.இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : BSNL ,
× RELATED சம்பளம் நிலுவை வழங்க கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்