×

அலங்கார பணிகள் மும்முரம் காரைக்காலில் முக்கிய சாலைகளில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் சீர்படுத்த பெற்றோர் சங்கம் கோரிக்கை

காரைக்கால், ஜூன் 4: காரைக்கால் மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்க தலைவர் வின்சென்ட், செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மாவட்ட போலீஸ் எஸ். எஸ் .பி ராகுல் அல்வாலிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:காரைக்கால் நகரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியால் அன்றாடும் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவர்கள், வேலைக்கு செல்லக் கூடிய பெற்றோர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடி அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் முக்கிய சாலைகளில் பாரதியார் வீதி, திருநள்ளார் வீதி, மாதா கோயில் வீதி, காமராஜர் சாலை போன்ற சாலைகளின் இருபுறங்களிலும் டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள் நடப்பதற்கு கூட இடமின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட காவல் துறை சிறப்பு கவனம் செலுத்தி மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக பெண் காவலர்களை அனைத்து பள்ளிவாயில்களிலும் நிறுத்த வேண்டும்’ காரைக்கால் கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக செல்லும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடற்கரை சாலையில் நடைபாதை , சிறுவர் பூங்கா, கடற்கரை மணல் பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் இரவு 9 மணிவரை பொழுதைப் போக்கி செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கான மின்விளக்கு, குடிநீர், நடைபாதை அனைத்தும் சீர்கெட்டு கிடைக்கிறது. எனவே அவற்றை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.மேலும் இரவு 10 மணிக்கு பிறகு இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக கடற்கரைச் சாலையில் செல்வதால் அவற்றைக் கண்காணிக்க மாவட்ட காவல்துறை முன்வர வேண்டும்.கடற்கரை நடைபாதைகளில் பலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை நடைபாதையில் உடைத்து செல்வதால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே கூடுதல் காவலர்களை நியமித்து நடைபாதை, போக்குவரத்து, மக்கள் நடமாடும் இடங்கைளை சீர்செய்ய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags : poojari ,roads ,Mammuram Karaikal ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...