×

பள்ளிகள் திறந்தாச்சு... மாணவிகள் உற்சாகம் தரங்கம்பாடி அருகே கடைக்காரர் வீட்டில் 20 பவுன் கொள்ளை ஜன்னல் கம்பியை வளைத்து மர்ம நபர்கள் கைவரிசை

தரங்கம்பாடி, ஜூன் 4: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆஞ்சநேயர்கோவிலில் கடை வைத்திருப்பவர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அனந்தமங்கலம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் லதா (48). இவர் அங்குள்ள ஆஞ்சநேயர்கோவில் சன்னதி தெருவில் அர்ச்சனை தட்டு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அமாவாசை என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. லதா வியாபாரத்தை முடித்துவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் ஜன்னல்கம்பி அறுக்கப்பட்டு பிரோக்கள் உடைக்கப்பட்டு இருப்பதையும் பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் நாகையிலிருந்து மோப்ப நாய் ரிட்டா வரவழைக்கப்பட்டு அது சம்பவம் இடத்தை மோப்பம் பிடித்து அருகிலிருக்கும் ஆஞ்சநேயர்கோவில் சன்னதிவரை சென்று நின்றுவிட்டது. அதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள சிசிடி கேமரா மூலம் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்ற பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளதாக என்பதை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : Schools ,shopkeeper house ,Thangangambadi ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில்...