×

பால்வார்பட்டியில் சிதிலமடைந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஜூன் 4: கரூர் நகராட்சிக்குட்பட்ட பால்வார்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் அடுத்துள்ள பால்வார்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தொட்டியில் நிரப்பப்படும் தண்ணீர், பால்வார்பட்டி, ஒத்தையூர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர்.இந்த தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகும் நிலையில், தொட்டியின் கீழ்ப்புற தூண்கள் அனைத்தும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிக்க வந்த பிரமுகர்களிடமும் இந்த பகுதியினர் இது குறித்து முறையிட்டுள்ளனர். இந்த தொட்டியை சுற்றிலும் குடியிருப்புகள் மிகவும் நெருக்கமாக உள்ள நிலையில், ஆபத்தான நிலையில் இந்த தொட்டியின் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தொட்டியை பார்வையிட்டு இதனை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED தேக்கமடைவதை கண்டறிந்து பாசன வாக்காலை...