×

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

கரூர், ஜூன் 4: கரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டன.கரூர் மாவட்டத்தில்அனைத்துப் பள்ளிகளும் நேற்று கோடை விடுமுறைக்குப் பின்னர் திறக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் கரூரில் 4, தாந்தோணிமலை 5, க,பரமத்தி 5, அரவக்குறிச்சி 3, என 17 நடுநிலைப்பள்ளிகள், குளித்தலை 47 கிருஷ்ணராயபுரம்12, கடவூர் 10, குளித்தலை 19, தோகமலை 6, பள்ளிகள் திறக்கப்பட்டன,மாவட்டத்தில் மெட்ரிக் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் 39, அரசு தொடக்கப்பள்ளிகள் 523, ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளிகள் 17, உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் 39, சுயநிதி மெட்ரிக் நடுநிலைப்பள்ளிகள் 86, அரசு நடுநிலைப்பள்ளிகள் 163, ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி2, உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள் 6 நேற்றுதிறக்கப்பட்டன. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு இலவச பாட நூல்கள் வழங்கப்பட்டன.பயோ மெட்ரிக் வருகைப்பதிவு செய்வதில் தாமதம்: தமிழகம் முழுவதும்அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறந்த முதல்நாளில் அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறையில் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் 128 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் வருகையைப்பதிவு செய்தனர். ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் அறையில் இருந்த கணினிமூலம் விரல்ரேகையை பதிவு செய்து வருகைப்பதிவு நடைபெற்றது.ஒவ்வொருவரும் ஆதார் அட்டையை பதிவு செய்து அதன் மூலம் விரல்ரேகை பதிவு நடைபெற்றது.இதற்காக தனியாக ஒருவர் பணிசெய்யவேண்டியதிருக்கிறது. மேலும் ஒவ்வொருவராக பதிவு செய்வதற்கு அரை மணிநேரத்திற்கும் மேலாகிறது. இதனால் தாமதம் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags : opening ,schools ,summer holiday ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...