கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவள்ளூர், ஜூன் 4: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சென்னீர்குப்பம் ஊராட்சியில், ஒன்றிய செயலாளர் பூவை எம்.ஜெயகுமார் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ. ஜனார்த்தனன், எம்.வெங்கடேசன், எம். இளையான், சுமதிகுமார், ஏ.ஆர். பாஸ்கர், ப.ச.கமலேஷ், எம்.ராம்பாபு, வக்கில் வி.கன்னியப்பன் மற்றும் ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி, வார்டு நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.திருவள்ளூர் ஒன்றியம் தண்ணீர் குளம் ஊராட்சி திமுக சார்பில் நடந்த விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.டி. தயாளன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். ஜெயசீலன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். குரு ரெட்டியார், சீனிவாசன், ஜெயபால், சத்யா, அசோக்குமார், ஏ.டி. ராஜமூர்த்தி, சேகர், அமலநாதன், மகேந்திரன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக  சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு  தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.  நிர்வாகிகள் திருமலை, பாஸ்கர், கணேசன், நகர செயலாளர் அறிவழகன், ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, செயலாளர் மு.மணிபாலன் தலைமை வகித்தார்.  ஒன்றிய நிர்வாகி மஸ்தான், மனோகரன், வாசு, ராஜேந்திரன், ரவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  நேமள்ளூரில் மாவட்ட இலக்கிய அணி புரவலர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திமுக நிர்வாகிகள் காமராஜ், ராமசந்திரைய்யா முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அரவிந்தன் பங்கேற்று திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் விழாவில் நேமள்ளூர் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் அணிகளுக்கு ₹40 ஆயிரம் மதிப்பிலான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை மாவட்ட இலக்கிய அணி புரவலர் மனோகரன் வழங்கினார்.பள்ளிப்பட்டு:  பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் திருவுருவ படத்துக்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊராட்சி செயலாளர் அச்சுதன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தசாமி, விவசாய அணி அமைப்பாளர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் பொதட்டூர்பேட்டையில் பேரூர் பொறுப்பாளர் டி.ஆர்.கே.பாபு தலைமையில், கட்சி கொடி ஏற்றிவைக்கப்பட்டு கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஜெ.எம்.சங்கரன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் டி.ஆர்.கே.ரவி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.எம்.சுகுமார் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : Celebration ,Karunanidhi Birthday Celebration ,
× RELATED அப்துல் கலாம் பிறந்த தினவிழா அக்.15 மாணவர்கள் தினமாக அறிவிக்க கோரிக்கை