×

பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது

கருங்கல், மே 30:  கருங்கல் பாலூரில் இயங்கிவரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். குறிப்பாக குமரி அறிவியல் பேரவையின் 2018-19ம் கல்வி ஆண்டிற்குரிய இளம் விஞ்ஞானி விருதுக்கான தேர்வில் இப்பள்ளியின் 2 மாணவர்கள் விருது பெற்றுள்ளனர். கடந்த ஒரு ஆண்டு காலமாக நடைபெற்ற பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த தேர்வுகள், கையெழுத்துத் தேர்வு, மொழித்தேர்வு, ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தல், குழு விவாதங்கள், வல்லுநர்களுடன் கலந்துரையாடல்கள், ஆராய்ச்சி பணிக்கான ஆய்வுப் பயணங்கள், திட்ட அறிக்கைகள் சமர்ப்பித்தல், செயல்முறை திட்ட விளக்கமளித்தல், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடல்கள் போன்ற அனைத்து பன்முக செயல்பாடுகளிலும் இப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி பமிடா பெடேனா மற்றும் மாணவன் மோனி ஜெய்ஸ் ஆகியோர் திறம்பட செயல்பட்டு இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளனர்.
 மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ இயக்குநர் மூக்கையா பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். இளம் விஞ்ஞானிகளை பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி, தாளாளர், முதல்வர், வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் வேலையன், மூத்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் பாராட்டினர்.

Tags : School Students ,CBSE ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்...