ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு கவுதமசிகாமணி எம்.பி. நன்றி

ஆத்தூர், மே 30: நரசிங்கபுரத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு, கள்ளக்குறிச்சி எம்.பி.கவுதம சிகாமணி நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், கவுதமசிகாமணி எம்பி பேசுைகயில், ‘தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மிகப்பெரிய குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். ஆத்தூர் தொகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். விரைவில் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேரில் சந்திக்க உள்ளேன். மாதம்தோறும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.
இதையடுத்து, ஆத்தூர் நகர திமுக நிர்வாகிகளை சந்தித்து நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் செழியன், நரசிங்கபுரம் நகர திமுக செயலாளர் வேல்முருகன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், மல்லியகரை ராஜா, பேரூர் செயலாளர் அல்லி நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், அயோத்தி, செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாழப்பாடி: பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய திமுக நிர்வாகிகளை சந்தித்து, கவுதமசிகாமணி எம்.பி. நன்றி தெரிவித்தார். ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் முத்துலிங்கத்திற்கு சால்வை அணிவித்தார். அப்போது, நிர்வாகிகள் மகாதேவன், அன்பு, பாரதி, சாந்தி முத்துலிங்கம், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பெரிய கிருஷ்ணாபுரத்தில் சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கவுதமசிகாமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags : Attur ,assembly ,DMK ,Govt ,
× RELATED ஆத்தூர் அருகே கால்வாயில் பாய்ந்த கார்