×

ஆத்தூரில் அதிரடி சோதனை 65 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

ஆத்தூர், மே 30:  ஆத்தூரில் நடத்திய சோதனையில் 65 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 43 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பழக்கடைகள், ஸ்வீட் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி ஆணையாளர் சரஸ்வதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன், செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் ராணிப்பேட்டை, கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 65 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திய 43 கடைக்காரர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.



Tags : Action test ,Atur ,
× RELATED ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர்...