திருச்செங்கோடு அருகே மணல் கடத்திய லாரி அதிபர் கைது

திருச்செங்காடு, மே 30:திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிவலசு பகுதியில், கடந்த வாரம் கிராம நிர்வாக அலுவலர் எழிலரசி மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட நிறுத்தினர். லாரியை நிறுத்திய டிரைவர், கீழே இறங்கி தப்பியோடிவிட்டார். இதையடுத்து லாரியை சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மணல் லாரியை பறிமுதல் செய்த விஏஓ எழிலரசி, திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தார். இதுகுறித்து எழிலரசி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் மணல் கடத்திய லாரியின் உரிமையாளரும், டிரைவருமான மோகனூரை சேர்ந்த தர்மலிங்கம்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Larry Chancellor ,Tiruchengode ,
× RELATED இழப்பீடுக்காக கார்களை ஜப்தி செய்ய...