×

சிங்களாந்தபுரத்தில் ஏரிகளை தூர்வார ஆலோசனை கூட்டம்

சேந்தமங்கலம், மே 30: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி சீரமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், பேளுக்குறிச்சி அடுத்த சிங்களாந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் இயற்கைவள மேலாண்மை தலைமை விஞ்ஞானி டாக்டர்.வேல்முருகன் கலந்துகொண்டு, சிங்களாந்தபுரம் ஏரியை பார்வையிட்டு, அதனை சீரமைக்க ஆலோசனை வழங்கினார். ஏரிகளை நல்லமுறையில் தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். கொல்லிமலை, போதமலை அடிவார பகுதிகளில் தடுப்பணை அமைத்து நீரை தேக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் விளைநிலங்கள் அருகே சிறு குட்டைகள் அமைந்து தண்ணீரை தேக்க வேண்டும். ஏரிகளுக்கு வரும் நீர்வழிப்பாதைகளை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தண்ணீர் நேராக ஏரிக்கு செல்லும்படி, அதன் கரைகளை பலப்படுத்த வேண்டும். ஏரி, நீர்வழி பாதை ஆக்கரமிப்புகளை விவசாயிகள் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அவர் ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : advice meeting ,lake ,Sinhala ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு