×

வேப்பனஹள்ளியில் ஆலங்கட்டி மழை

வேப்பனஹள்ளி, மே 30:  வேப்பனஹள்ளியில் கடந்த ஒரு மாதமாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தகித்து வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இதேபோல், சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் பகலில் அதிக வெப்பத்துடன் அனல் காற்று வீசியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதை தொடர்ந்து, மாலையில் சூறைகாற்றுடன் லேசான மழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் மட்டுமே மழை பெய்ததால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.  


Tags : Veppanahalli ,
× RELATED பஸ்கள் நிறுத்தப்பட்டதால்...