தீ விபத்தில் மூதாட்டி பலி

தர்மபுரி, மே 30: தர்மபுரி அருகே தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள் (83). இவருடைய கணவர் மற்றும் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டனர். இந்நிலையில் ஆண்டாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் மின் இணைப்பு இல்லை. மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு வைத்துக் கொண்டு,  தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆண்டாளின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் உடல் முழுவதும் தீ பரவியது. ஆண்டாள் கதறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் மண் கொட்டியும், தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி ஆண்டாள் உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில் தீ