×

ரூ.1.50 லட்சம் பக்தர்கள் காணிக்கை புள்ளம்பாடி அருகே பல மாதங்களாக குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர் வடிகாலில் கலக்கும் அவலம்

லால்குடி, மே 30:   புள்ளம்பாடி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி கழிவுநீர் வடிகாலில் கலக்கும் அவலநிலை நிலவுகிறது. லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடத்திலிருந்து கூட்டு குடிநீர் திட்டம்  மூலமாக 32க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புள்ளம்பாடி ஒன்றியம், அலுந்தலைப்பூர் கிராமத்திலிருந்து சிறுகளப்பூர் நம்புக்குறிச்சி ஊட்டத்தூர் நெய்குளம் ஆகிய கிராமங்களுக்கு கொள்ளிடம் குடிநீர் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆழ்குழாய் கிணறு  வற்றி கடுமையான குடிநீர் பற்றாக்குறையாக உள்ள நிலையில் கொள்ளிடம் குடிநீரை மட்டுமே பகுதி மக்கள் நம்பி உள்ளனர்.  இந்நிலையில் சிறுகளப்பூர் கிராமத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகி கழிவுநீர் வடிகாலில் கலக்கிறது. மேலும் குழாய் உடைந்தது சாலை பகுதியாக உள்ளதால் அங்கு தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. குடிநீர் நின்றவுடன் சாலையில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரும் குழாய் மூலம் சென்று குடிநீரில் கலக்கும் நிலையும் உருவாகி வருகிறது. புள்ளம்பாடி ஒன்றிய பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் குடிநீருக்காக கிராம மக்கள் அலைந்து வரும் இந்த வேளையில் பல மாதஙகளாக குடிநீர் குழாய் உடைந்து  வீணாகும் குடிநீரை புள்ளம்பாடி ஒன்றிய அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.


Tags : pilgrims ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்