மன்னார்குடி அருகே சாலையை கடக்க முயன்றவர் பைக் மோதி பரிதாப பலி

மன்னார்குடி, மே 30: மன்னார்குடி அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (33). டைல்ஸ் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாக வெண்ணிலா (24) என்ற மனைவியும், தனுசா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.கோகுலகிருஷ்ணன் மன்னார்குடி அருகே ராயபுரம் கிராமத் தில் வசித்து வரும் தனது மைத்துனர்  ஜெயராமன் வீட்டில் நடந்த  காது குத்து விழாவுக்கு  தனது உறவினர் பட்டுக்கோட்டை அருகே மேட்டுவயல் கிராமத்தை சேர்ந்த  தினேஷ் ( 24) என்பவருடன் நேற்று காலை பைக்கில் சென்றுவிட்டு விழா முடிந்ததும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். உள்ளிக்கோட்டை அடுத்த சம்பட்டி குடிக்காடு அருகே  வந்தபோது நீடாமங்கலம் அடுத்த நன்மங்கலம் கிராமத் தை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகையன் (67) என்பவர் திடீரென சாலையை கடந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் போட்டும் பைக் நிற்காமல் முருகையன் மீது மோதியது. இதில் பைக்கிலிருந்து கீழே விழுந்த கோகுல கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தினேசும், முருகையனும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு முருகையனை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கும், தினேசை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்த பரவாக்கோட்டை எஸ்ஐ ஜெகஜீவன் கோபால கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : road ,Mannargudi ,
× RELATED தாழ்வாக தொங்கும் உயர் அழுத்த...