×

அக்னி நட்சத்திரம் விடைபெற்றது சுட்டெரித்த சூரிய வெப்பம் படிப்படியாக குறைய வாய்ப்பு

கூத்தாநல்லூர், மே 30: அக்னி நட்சத்திரம் நேற்றோடு முடிந்ததையடத்து  சுட்டெரித்த சூரியனின் வெப்பத்தாக்கம் மெதுவாக குறையத்தொடங்கியது. ஆண்டுதேறும் கோடையில் வெப்பத்தை கத்திரி வெயிலாய் கக்கும் அகினிநட்சத்திரம் கடந்த 15 நாட்களுக்கு பிறகு நேற்றோடு முடிவடைந்தது. கத்திரிவெயில் தாக்கம் கடந்த 15 நாட்களாக மக்களை வாட்டி எடுத்தது.  பல இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பத்தின் அளவு, டெல்டா மாவட்டங்களில் சற்று அதிகமாகவே தனது உக்கிரத்தை கட்டிச்சென்றிருக்கிறது.    வழக்கமாக சென்னை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில்தான் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக தென்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட டெல்டா மாவட்டங்களை அதிலும் குறிப்பாக நாகை, திருவாரூர் மாவட்டங்களை அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கம் அதிமகமாகவே பாதிக்கச்செய்தது. சாலைகளில் வாகனத்தில் சென்றவர்களும், முகத்தில் அனல்காற்று வீசியதால் வெப்பம் தாங்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெண்கள் முகத்தை மூடிக்கொண்டே வாகனத்தில் பயணித்தனர்.  

சமீபத்தில் அடித்த கஜா புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததே   இதற்கு முக்கிய காரணம். வேரோடு சாய்ந்த மரங்களை தவிர்த்து, ஏனைய சாய்ந்த மரங்கள் தற்போதுதான் துளிர்க்கத் துவங்கியிருக்கின்றன. ஆனாலும் அக்னிநட்சத்திரத்தின் வெப்பக்கொடுமையை குறைக்க துளிர்விடும் மரங்கள் போதுமானதாக இல்லை என்பதே உண்மை.வெப்பத்தை குறைக்கும் தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் நுங்கு போன்றவைகளின்  விற்பனை அமோகமாக இருந்த நிலையில், குளிர்ச்சித்தரும் இளநீர் மட்டும் டெல்டா பகுதிகளில் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அக்னிநட்சத்திரம் நேற்றோடு முடிந்த நிலையில் இனி வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என்பதால் பொதுமக்கள் சற்று ஆறுதலாக உள்ளனர்.


Tags : one ,Agni ,
× RELATED ஜவ்வரிசி கொழுக்கட்டை