கூத்தாநல்லூர் தாலுகாவில் 6ம் தேதி ஜமாபந்தி துவக்கம்

கூத்தாநல்லூர், மே 30: திருவாரூர் மாவட்டத்தின் 1428ம் பசலிக்கான வருவாய் ஆயத்தீர்வைக்கான கணக்குகள் முடித்தல் (ஜமாபந்தி) நிகழ்ச்சி வருகிற 6ம்தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது: கூத்தாநல்லூர் வட்டத்திற்கான ஜமாபந்தி வருகிற ஜூன் 6ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்குகள் முடித்தல்  பணி நடைபெறவிருக்கிறது.
மேற்கண்ட நாட்களில் அரசு விடுமுறை நாட்கள்,  சனி மற்றும் ஞாயிறு, திங்கள் நீங்களாக தினசரி காலை 10.00 மணிக்கு வருவாய் தீர்வாயக்கணக்கு தணிக்கை பணிகள் ஆரம்பிப்பதால் பொதுமக்கள் தொடர்புடைய  வட்ட அலுவலகங்களில்  தங்கள் கிராமத்திற்குறிய தீர்வாய கணக்குகள் முடிக்கப்படும் நாளில்,  தங்களது கோரிக்கைகளை வருவாய் தீர்வாய அலுவலரிடம்  மனுக்களாக சமர்ப்பித்து பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு தெரிவிக்கிறது.


Tags : Jamapanti ,Koothanallur Taluk ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் பலத்தமழை எதிரொலி:...