×

கலெக்டருக்கு மனு அகில இந்திய பேட்மிட்டன் போட்டி பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை

பட்டுக்கோட்டை, மே 30: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 2வது சாம்பியன்சிப் பேட்மிட்டன் போட்டி நடந்தது.இதில் பட்டுக்கோட்டை அடுத்த  பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் டயன்டோனிரிட்ஸ் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடமும், இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். சாதனை படைத்த மாணவர் டயன்டோனிரிட்ஸை பள்ளி தாளாளர் சுவாமிநாதன், செயலாளர் சரவணன் ஆகியோர் கவுரவித்தனர். விழாவில் பள்ளி இயக்குனர்கள் ராமையா, கோபாலகிருஷ்ணன், ரத்தினக்குமார், ராஜமாணிக்கம், மோகன், டாக்டர்கள் கவுசல்யா ராமகிருஷ்ணன், கண்ணன், பிரசன்னா, தலைமையாசிரியர் முகமது அக்பர்அலி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.சிஐடியூ மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம்தஞ்சை, மே 30: தஞ்சை மாவட்ட சிஐடியூ 14வது மாநாடு வரும் ஜூலை 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி தஞ்சை பாலாஜி நகரில் சிஐடியூ மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட மாநாடு, பேரணி, பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதன் அவசியம் குறித்து மாவட்ட செயலாளர் ஜெயபால் பேசினார். வரவேற்புக்குழு தலைவராக புண்ணியமூர்த்தி, செயலாளராக செங்குட்டுவன், பொருளாளராக ராஜாராமன் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளை கொண்ட மொத்தம் 51 பேர் கொண்ட மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேலு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.

Tags : Collector All India Badminton Competition Pattukottai Brindavan Higher Secondary School ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா