×

மர்மநபர்களுக்கு வலைவீச்சு கும்பகோணம் நவீன கட்டுப்பாட்டு அறையில் சிசிடிவி பதிவுகளை எஸ்பி ஆய்வு

கும்பகோணம், மே 30: கும்பகோணம் நவீன கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிசிடிவி பதிவுகளை தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் ஆய்வு செய்தார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு, வாகன திருட்டு, வீடுகளில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் நகர பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளால் வாகன நெருக்கடியாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததால் தஞ்சை எஸ்பி மகேஸ்வரனுக்கு பொதுமக்கள் புகார் அனுப்பினர்.

அதன்படி நேற்று மாலை தஞ்சை எஸ்பி மகேஸ்வரன், கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது மகாமகத்தின்போது கட்டப்பட்ட நவீன கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் கும்பகோணம் நகரத்தில் உள்ள சிசிடிவியின் கட்டுப்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும் வேலை செய்யாத கேமராக்களையும், பழுதான கேமராக்களையும் உடனடியாக மாற்றி அமைக்க உத்தரவிட்டார். பின்னர் கேமராக்கள் துல்லியமாக படங்களை காட்டுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.இதையடுத்து செட்டிமண்டபம், நால்ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Tags : CCTV ,controlling room ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...