×

தேனி மாவட்டத்தில் 5 தாலுகாவிலும் ஜூன் 4ல் ஜமாபந்தி தொடங்கி 13ல் முடிகிறது

உத்தமபாளையம், மே 30:தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாவிலும் ஜமாபந்தி 4ம் தேதி தொடங்கி 13ம் தேதியுடன் முடிகிறது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி, தேனி, பெரியகுளம், என 5 தாலுகாக்கள் உள்ளன. பாராளுமன்ற தேர்தல் நடந்ததை முன்னிட்டு வழக்கமாக மே தொடக்கத்தில் நடக்கும் ஜமாபந்தி இந்த வருடம் வரும் ஜூன் 4ம் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது. உத்தமபாளையம் தாலுகாவில் ஜூன் 4ல் தொடங்கி 13தேதி முடிகிறது.
ஊர்வாரியாக விபரம்:
ஜூன் 4: (செவ்வாய்கிழமை): மார்க்கையன்கோட்டை பிர்காவில், பொட்டிப்புரம், சங்கராபுரம், குச்சனூர்,
தேவாரம் பிர்காவில், தேவாரம், தேவாரம்மலை (குரூப்), தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம்.
ஜூன் 6: (வியாழன்): புலிக்குத்தி, மார்க்கையன்கோட்டை (குரூப்), சின்னமனூர் பிர்காவில், பூலாநந்தபுரம், சின்னமனூர், கருங்கட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம், ஜூன் 7: (வெள்ளி) எரசக்கநாயக்கனூர் பிர்காவில், வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர்மலை (குரூப்),

ஜூன் 11: (செவ்வாய்கிழமை): உத்தமபாளையம் பிர்காவில், கோம்பை (கிழக்கு), கோம்பை (மேற்கு), மல்லிங்காபுரம்,உத்தமபாளையம் (தெற்கு), உத்தமபாளையம்(வடக்கு), கோகிலாபுரம், ராயப்பன்பட்டி.
ஜூன் 12: தேதி(புதன்கிழமை): கம்பம் பிர்காவில், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், ஜூன் 13: (வியாழக்கிழமை): மேலக் கூடலூர் (தெற்கு), மேலக்கூடலூர் (வடக்கு), கீழக் கூடலூர் மேற்கு), கீழக் கூடலூர் (கிழக்கு), நாராயணதேவன்பட்டி (தெற்கு மற்றும் வடக்கு), காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு நடக்கிறது.

ஆண்டிபட்டி தாலுகாவில்,  ஜூன் 4ம் தேதி செவ்வாய்கிழமை: ஆண்டிபட்டி பிர்காவில், புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் பிட்-1, திம்மரசநாயக்கனூர் பிட்-2.
ஜூன் 6: (வியாழக்கிழமை): கோவில்பட்டி, சண்முகசுந்தரம், ஆண்டிபட்டிபிட்-1, ஆண்டிபட்டி பிட்-2,  ஜூன் 7: (வெள்ளிக்கிழமை): ராஜதனி பிர்காவில், கோத்தலூத்து, கொத்தம்பட்டி, ராஜதானி (குரூப்), பழைய கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை (குரூப்),  தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்ப்பட்டி (குரூப்),

ஜூன் 11: (செவ்வாய்கிழமை): கண்டமனூர் பிர்காவில், மொட்டனூத்து, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, (குரூப்),  குன்னூர், வள்ளல் நதி, ஜூன் 12: தேதி (புதன்கிழமை): மயிலாடும்பாறை பிர்காவில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை.
தேனி தாலுகாவில் ஜூன் 4:(செவ்வாய்கிழமை): தேனி பிர்காவில், ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி. ஜூன் 6: (வியாழக்கிழமை):
கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி பிர்காவில், பூமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி (குரூப்), ஜூன் 7:(வெள்ளிக்கிழமை): கொடுவிலார்பட்டி பிர்காவில், கொடுவிலார்பட்டி, கோவிந்த நகரம், ஜங்கால்பட்டி.

பெரியகுளம் தாலுகாவில் ஊர்வாரியாக விபரம்:
ஜூன் 4: (செவ்வாய்கிழமை): தேவதானப்பட்டி பிர்காவில், கெங்குவார்பட்டி பிட்-1,கொங்குவார்பட்டி பிட்-2,
தேவதானப்பட்டி பிட்-1,  தேவதானப்பட்டி பிட்-2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி (குரூப்), ஜூன் 6: (வியாழக்கிழமை):
ஜெயமங்கலம் பிட்-1,  ஜெயமங்கலம் பிட்-2, குள்ளப்புரம், மேல்மங்கலம்பிட்- 1, மேல்மங்கலம் பிட்-2,  ஜூன் 7: வெள்ளிக்கிழமை: தென்கரை பிர்காவில், எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, கீழ வடகரை, வடகரைபிட்-1,  வடகரைபிட்-2,  ஜூன் 11: (செவ்வாய்கிழமை): தென்கரைபிட்-1, தென்கரைபிட்-2, தாமரைக்குளம் பிட்-1, தாமரைக்குளம்பிட்-2, வடவீரநாயக்கன்பட்டி.

போடி தாலுகாவில் ஊர்வாரியாக விபரம்:
ஜூன் 4: (செவ்வாய்கிழமை): போடிநாயக்கனூர் பிர்காவில், கொட்டக்குடி, போடி வடக்கு மலை, அகமலை, ஜூன் 6: (வியாழக்கிழமை): போடி பிர்காவில், மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்கு மலை(குரூப்), போடி நாயக்கனூர், ஜூன் 7: (வெள்ளிக்கிழமை), ராசிங்காபுரம் பிர்காவில், பி.மீனாட்சிபுரம், ராசிங்காபுரம், சிலமலை, பி.அம்மாபட்டி, ஜூன் 11: (செவ்வாய்கிழமை): கோடங்கிபட்டி பிர்காவில், பூதிப்புரம்,கோடங்கிபட்டி, டொம்புச்சேரி, உப்புக்கோட்டை, கூழையனூர் உள்ளிட்ட ஊர்களில் நடக்கிறது.

Tags : Theni district ,Taluks ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...