×

கட்டுமாவடியில் இந்து- இஸ்லாமியர் இணைந்து நடத்திய கோயில் திருவிழா

மணமேல்குடி, மே 30: மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக கட்டுமாவடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதியான கட்டுமாவடியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏனாதி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழா 15 நாட்களாக  நடந்தது.

இத்திருவிழாவை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து நடத்தி வருகின்றனர். காப்பு கட்டுதலுடன் துவங்கிய திருவிழாவின் ஒரு பகுதியாக கோயிலின் அருகே உள்ள ஷேக் இஸ்மாயில் தர்காவில் பாத்தியா ஓதி அன்னதானம் வழங்கப்பட்டது. பிறகு 15 நாட்களாக இந்து மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 9 கிராம மக்கள் மண்டகப்படி எடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் திருவிழாவின் ஒரு பகுதியாக பால்குடம், காவடி மற்றும் தீமிதி நிகழ்ச்சி நடந்தது.

Tags : temple festival ,
× RELATED திருமயம் அருகே மேரிநகர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா