×

கலந்தாலோசனையில் அறிவுரை முள்ளிப்பட்டி- மேலத்தானியம் சாலையோரம் எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கும் மின்கம்பம்

பொன்னமராவதி, மே 30: பொன்னமராவதி அருகே முள்ளிப்பட்டி- மேலத்தானியம் சாலையோரம் காரைகள் பெயர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டி- மேலத்தானியம் சாலையோரத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த லைனில் உள்ள ஒரு மின்கம்பத்தில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே உடைந்து விழும் நிலையில் எலும்புக்கூடு போல காட்சியளிக்கும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். இந்த வழியாக செல்லும் மின்கம்பிகள் தொங்கிய நிலையில் உள்ளது.எனவே தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டுமென மின்வாரிய துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Consultation ,Mullipatti - Melatanam Road ,
× RELATED கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில்...