×

திருமயம் அருகே விநோதம் கந்தர்வகோட்டையில் குடிநீர் கேட்டு நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு

கந்தர்வகோட்டை, மே 30: கந்தர்வகோட்டை ஒன்றிய பகுதிகளில் குடிதண்ணீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட அறிவிப்பு வெளியிட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.கந்தர்வகோட்டை நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மின்தடை காரணமாகவும், நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதன் விளைவாக தண்ணீர் பிரச்னை அதிகளவு உள்ளது. நகர் பகுதிகளில் வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் தண்ணீரை சிலர் மோட்டார் வைத்து உறிஞ்சி விடுவதால் அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.கல்லாக்கோட்டையில் புதிய துணைமின் நிலையம் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அதற்கு அவ்வப்போது மின்சாரத்தை துண்டித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வேலாடிப்பட்டி, வௌ்ளாளவிடுதி மற்றும் கல்லாக்கோட்டை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் தண்ணீர் தட்டுபாடு நிலவி வருகிறது. இதை கண்டித்து நேற்று சாலைமறியல் போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். உடனே கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் கலைமணி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தாசில்தார் கலைமணி தலைமையில் கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் மற்றும் மின்சார வாரியத்தை சேர்ந்த பொறுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது 3 கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் பிரச்னை முடிவுக்கு வரும். ஆழ்குழாய் கிணறு இல்லாத பகுதிகளில் உடனே ஆழ்குழாய் கிணறு அமைத்து தரவேண்டும். தண்ணீர் டேங்க் இல்லாத பகுதிகளில் உடனே டேங்க் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மின்சார வாரியத்தினர் கல்லாக்கோட்டையில் அமைக்கப்பட்டு வரும் புது துணைமின் நிலைய பணிகள் இம்மாதத்தில் முடிக்கப்பட்டு விரைவில் துவங்கப்படவுள்ளது. எனவே தடையின்றி மின்சாரம் விரைவில் கிடைக்கும் என உறுதி அளித்தனர். இதனால் சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : fight ,Gandharvatte ,Vyadam ,Wayanad ,
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது